நண்பர்களே,
நான் அன்மையில் தஞ்சை பெரியகோவில் சென்றேன், கோவிலின் அழகையும்,கம்பீரத்தையும் நான் ரசித்துக்கொண்டிருக்கும்போது ஓர் எண்ணம் எனக்கு தோன்றியது, இவ்வளவு பெரிய ராஜ்ஜியத்தை ஆண்டு , உலகம் வியக்கும்படி ஒரு சிறப்பான கோவிலையும் நிர்மானித்த அம்மன்னனின் அரன்மனை, சமாதி இவையெல்லாம் என்னவாயிருக்கும் என்பதுதான் எனது எண்ணம்।
இதனைபற்றி அங்குள்ளவர்களை விசாரித்தால் சரியான தகவல்கள் எதுவும் எனக்கு கிடைக்கவில்லை , ஆகையால் வலைத்தளத்தில் எனது தேடலை தொடங்கினேன் கிடைத்த விசயங்கள் என்னால் நம்பமுடியவில்லை । இராஜ ராஜனின் சமாதி குடந்தைக்கு அருகே உள்ள பழையாறு என்னுமிடத்தில் ஒரு வாழைத்தோட்டத்தின் மத்தியில் கவனிப்பாறற்று உள்ளது என்பதே।
இந்த இடம் இராஜ ராஜனின் சமாதி என்று தொல்லியல் துறையால் உறுதி செய்தும் இதற்கு எந்த நடவடிக்கையும் அரசு எடுக்க முன்வரவில்லை என்பதே வேதனை।
ஆண்டுதோறும் "சதயவிழா" தஞ்சையில் நடத்தி தனக்கு பெருமை தேடிக்கொள்ளும் அரசியல்வாதிகளும், அரசாங்கத்தார்களும் அம்மன்னனின் நினைவிடத்தை கண்டுகொள்வதில்லை।
அரசியல்வாதிகளுக்கும், நடிகர்,நடிகைகளுக்கும்- கோவில் மற்றும் நினைவிடங்கள் கட்டத்துடிக்கும் நம் தமிழர்கள், தமிழர்களின் கட்டிடகலையையும், கலையுனர்வையும் உலகுக்கு உணர்த்திய ஓர் மாமன்னனின் சமாதியை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரிய ஒன்று।
நான் வலைத்தளத்தில் கண்ட தகவல்களை தங்கள் பார்வைக்கு பதிவிக்கிறேன்।
இங்ஙனம்
புதுமைபித்தன்
4 comments:
ராஜராஜன் வேண்டுமானால் அக்காலத்தில் ராஜாதிராஜனாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அவன் பெயரைச் சொல்லி ஒரு ஓட்டாவது வாங்க முடியுமா..?
முடியுமெனில் இந்நேரம் 1 கோடி ரூபாய் செலவில் விழா நடத்தப்பட்டு நினைவுச் சின்னமாகியிருக்கும்.
இல்லையென்பதால் 'வழக்கப்படி' கண்டு கொள்ளப்படாமல் உள்ளது.
இதிலென்ன ஆச்சரியம்..?
நண்பரே தங்கள் வருகைக்கு நன்றி.
நீங்கள் கூறிய விசயம் ஏற்றுகொள்ள கூடியதுதான் ஆனாலும் அவர் எழுப்பிய அந்த கோவிலையும்,அழிவிழுருந்து அவர் காத்துதந்த தேவார பதிகங்களையும, தற்போதுள்ள நில அளவை முறையை அன்றே அறிமுகபடுத்திய அவரது புகழையும் பெருமையாக மேடையில் பேசி கைதட்டல் வாங்குபவர்களுக்கு உறுத்தலாக இருக்காதா?
oru nal ange neraa poy parkka ventum :-)
polamaa?
தங்கள் வருகைக்கு நன்றி SREERAM,
திரு.இரா.கலைக்கோவன் அவர்களின் ஆய்விலிருந்து அது மாமன்னன் ராஜராஜரின் பள்ளிப்படையாக இருக்க வாய்ப்புகள் குறைவு என்பது தெரியவருகிறது.பார்க்க பதிப்பு 4.
Post a Comment